தைவானை தாக்கிய சூறாவளி - 2 பேர் பலி


தைவானை தாக்கிய சூறாவளி - 2 பேர் பலி
x
தினத்தந்தி 2 Oct 2024 6:00 PM GMT (Updated: 3 Oct 2024 12:12 PM GMT)

தைவானை தாக்கிய சூறாவளியில் 2 பேர் உயிரிழந்தனர்.

தைபே சிட்டி,

தைவான் நாட்டில் சூறாவளி புயல் வீசி வருகிறது. பலத்த காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. சூறாவளி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதியடைந்துள்ளனர். கனமழை, சூறாவளி காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சூறாவளியில் சிக்கி 2 பேர் பலியாகியுள்ளனர், 70 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று தைவான் அரசு தெரிவித்துள்ளது.


Next Story