அமெரிக்க பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- 2 பேர் பலி


அமெரிக்க பள்ளியில் மர்ம நபர் துப்பாக்கி சூடு- 2 பேர் பலி
x

துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர்.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் உயர்நிலைப்பள்ளியில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாக சுட்டார்.

இதனால் பள்ளியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். துப்பாக்கி சூட்டில் இரண்டு பெண்கள் பலியானார்கள். 6 பேர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்றனர். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். பின்னர் பள்ளிக்குள் இருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.


Next Story