இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 2 பேர் சுட்டுக்கொலை


இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
x

கோப்புப்படம்

இஸ்ரேல் படையால் பாலஸ்தீனர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜெருசலேம்,

இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகைமை நிலவுகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த போராளிகள் பலர் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதனால் பாலஸ்தீன பயங்கரவாதிகளை களையெடுப்பதாக கூறி மேற்குகரை பகுதியில் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் இஸ்ரேல் வீரர்கள் அடிக்கடி அதிரடி தேடுதல் வேட்டையை நடத்துகின்றனர். இதுபோன்ற தேடுதல் வேட்டைகளின்போது அப்பாவி பாலஸ்தீன மக்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை மேற்குகரை பகுதியில் உள்ள ஜலசோன் நகரில் இஸ்ரேல் வீரர்கள் வழக்கமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாலஸ்தீனத்தை சேர்ந்த வாலிபர்கள் இருவர் இஸ்ரேல் வீரர்கள் மீது காரை மோதி தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து ராணுவ வீரர்கள் அந்த கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாலஸ்தீன வாலிபர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.


Next Story