உலகைச்சுற்றி

சிரியாவில் சண்டையிட்டு வருகிற ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த ஒருவர் மீது ரஷியாவை சேர்ந்த 21 வயது மாணவி வர்வாரா என்பவர் காதல் கொண்டார்.
* சிரியாவில் சண்டையிட்டு வருகிற ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த ஒருவர் மீது ரஷியாவை சேர்ந்த 21 வயது மாணவி வர்வாரா என்பவர் காதல் கொண்டார். அவர் தனது காதலருடன் சேர்வதற்காக சிரியா செல்ல புறப்பட்டபோது, போலீசிடம் சிக்கினார். இது தொடர்பாக அவர் மீது ரஷிய ராணுவ கோர்ட்டில் வழக்கு தாக்கலாகி, இப்போது 4½ ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
* ஈரானில் மத்திய டெக்ரான் நகரில் அதிபர் மற்றும் மதத்தலைவர் அலுவலகங்களை படம் பிடிக்க வானில் பறந்து சென்ற ஆளில்லா விமானத்தை ஈரான் விமானப்படையினர் சுட்டுத்தள்ளினர். பின்னர் அந்த விமானம், ஒரு ஆவணப்படத்துக்காக படக்குழுவினரால் அனுப்பப்பட்டதாக தெரியவந்தது.
* ஆஸ்திரேலியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மெல்போர்ன் உள்ளிட்ட நகரங்களில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு, கத்தி தாக்குதல், துப்பாக்கிச்சூடு நடத்த சதி செய்திருப்பதை கண்டறிந்து, அந்த நாட்டின் போலீசார் முன்கூட்டியே முறியடித்து விட்டனர். இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
* ஜெர்மனியில் ஓபர்ஹாசன் நகரில் உள்ள வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் இருவரும் சகோதரர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

Next Story