போதை பழக்கம், பேராசிரியருடன் ஓரின சேர்க்கை,முன்னாள் காதலி, பாராக் ஒபாமாவின் சுயசரிதை புத்தகம்


போதை பழக்கம், பேராசிரியருடன் ஓரின சேர்க்கை,முன்னாள் காதலி, பாராக் ஒபாமாவின் சுயசரிதை புத்தகம்
x
தினத்தந்தி 5 May 2017 10:56 AM IST (Updated: 5 May 2017 10:55 AM IST)
t-max-icont-min-icon

போதை பழக்கம், பேராசிரியருடன் ஓரின சேர்க்கை,முன்னாள் காதலி, பாராக் ஒபாமாவின் வாழ்க்கை குறித்து தி மேகிங் ஆப் பாரக் ஒபாமா புத்தகம் விரைவில் வெளியாகிறது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் வாழ்க்கை குறிப்பு குறித்து டேவிட் கரரோம் என்பவர் புத்தகமாக எழுதி உள்ளார். தி மேகிங் ஆப் பாரக் ஒபாமா (The Making of Barack Obama) என்ற பெயரில் எழுதபட்டு உள்ள இந்த புத்தகம் மே 9 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இந்த புத்தகத்தை எழுதியுள்ள  ஆசிரியர் அதில் இடம்பெற்றுள்ள ஒரு சுவாரசிய சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மிச்செல் ஒபாமாவை சந்திப்பதற்கு முன் ஷிலா மியோசி ஜகர்  என்ற பெண்ணை ஒபாமா காதலித்துள்ளார். தன்னுடைய காதலை ஜகரிடம் இரண்டு முறை தெரிவித்து என்னை திருமணம் செய்துகொள்கிறாயா எனக்கேட்டுள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு ஜெகரின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏனெனில், அப்போது தான் தனது அரசியல் பயணத்தை ஒபாமா ஆரம்பித்திருந்தார். அதுமட்டுமின்றி அவர் வயதில் சிறியவராக இருந்த காரணத்தால் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தற்போது, ஒகியோவில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக ஜகர் பணியாற்றி வருகிறார். தன்னுடைய காதல் விவகாரம் குறித்து எழுத்தாளர் டேவிட்டிடம் - யிடம் ஜகர் தெரிவித்துள்ளார்.

நான் வெள்ளை பெண்ணுடன் டேட்டிங் சென்றிருந்தால், ஒரு அமெரிக்க ஜனாதிபதியாக நின்றிருக்கமாட்டேன் என ஒபாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த புத்தகத்தில் டொனால்டு டிரம்பினை தனது முன்மாதிரியாக ஒபாமா கருதினார் என்ற தகவலும் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. 
1 More update

Next Story