‘பால்கன் ஹெவி ராக்கெட்’ மூலம் விண்வெளிக்கு அனுப்பிய கார், பாதை மாறியது


‘பால்கன் ஹெவி ராக்கெட்’ மூலம் விண்வெளிக்கு அனுப்பிய கார், பாதை மாறியது
x
தினத்தந்தி 8 Feb 2018 9:45 PM GMT (Updated: 8 Feb 2018 8:55 PM GMT)

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம், கேப் கேனவரலில் அமைந்து உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் ஹெவி’ ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

கேப் கேனவரல்,

‘பால்கன் ஹெவி’  ராக்கெட், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க்குக்கு சொந்தமான சிவப்பு நிற டெஸ்லா காரை சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

அந்த கார், செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையேயான சுற்றுப்பாதையில் சுற்றி வருமாரு திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த கார் நிச்சயிக்கப்பட்டு இருந்த தடத்தை விட்டு மாறி சென்று விட்டது. தற்போது அது விண்வெளியில் மிகவும் தூரமான ஆஸ்டீராய்ட் பெல்ட் பகுதிக்கு சென்று கொண்டு இருக்கிறது.

இந்த தகவலை எலோன் மஸ்க், டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.


Next Story