முதலையை வைத்து வித்தை காட்டியவருக்கு நேர்ந்த கொடுமை


முதலையை வைத்து வித்தை காட்டியவருக்கு நேர்ந்த கொடுமை
x
தினத்தந்தி 30 July 2018 10:13 AM GMT (Updated: 2018-07-30T15:43:04+05:30)

தாய்லாந்தில் வனவிலங்குகள் பூங்காவில் முதலையை வைத்து வித்தை காட்டி கொண்டிருக்கும் பொழுது, திடீரென அந்த நபரை முதலை தாக்கும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

 தாய்லாந்தின் இயாங் ராய் பகுதியில் செயல்பட்டு வரும் பொக்கதரா வனவிலங்குகள் பூங்காவில், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கத்திற்கு மாறாக அதிகமான பார்வையாளர்கள் பூங்காவிற்கு வருகை தந்திருந்தனர். அப்பொழுது அங்கு பணிபுரியும் தாவோ என்ற 45 வயதுள்ள நபர் முதலையை வைத்து பார்வையாளர்களிடம் வித்தை காட்டிக் கொண்டிருந்தார். அதனை அருகிலிருந்த மற்றொருவர்  பார்த்து கொண்டேயிருந்தார். இதற்கிடையில் திடீரென எதிர்பாராத நேரத்தில் முதலை ஒரு நிமிடம் தாவோ -வின் கையை பதம் பார்த்து விட்டுச் சென்றது.

இதனையடுத்து காயங்களுடன் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தாவோ  இடம்பெயர்ந்தார். ரத்த வாசனையால் மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்பட கூடாது என்பதற்காக உடனடியாக அருகிலிருந்த மற்றொரு வித்தை காட்டும் நபர் தண்ணீர் ஊற்றி ரத்தத்தை சுத்தம் செய்தார். இந்த சம்பவம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இந்த நிலையில், இதனை வீடியோவாக பதிவு செய்த ன் ஃபூசாவிட்  (35) என்ற பார்வையாளர், நான் எனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் நேற்று அங்கு சென்றிருந்தேன். அந்த சம்பவம் நிகழ்வதற்கு முன்பு வரை அனைத்தும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் ஏன் அந்த அசம்பாவிதம் ஏற்பட்டது என்பது தெரியவில்லை.  

அந்த முதலை அவரது கையை துண்டிக்க விரும்பவில்லை என்பது நான் அந்த வீடியோவை திரும்ப திரும்ப பார்த்ததிலிருந்தே தெரிந்து கொண்டேன். அவர் விரைவில் குணமடைந்து விடுவார் என தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

Next Story