ஆஸ்திரேலியாவில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல்: பலர் காயம் என தகவல்


ஆஸ்திரேலியாவில் மர்ம நபர் கத்தியால் தாக்குதல்: பலர் காயம் என தகவல்
x
தினத்தந்தி 13 Aug 2019 7:32 AM GMT (Updated: 13 Aug 2019 7:32 AM GMT)

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், முகமூடி அணிந்தபடி கத்தியுடன் வந்த நபர், கண்ணில் கண்டவர்களை எல்லாம் சரமாரியாக தாக்கினார். சிட்னியில் அதிக வணிகம் நடைபெறும் வர்த்தக மையமாக விளங்கும் சிபிடி (சென்ட்ரல் பிஸினஸ் டிஸ்ட்ரிக்ட்) பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றது.

தாக்குதல் நடத்திய நபரை உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டு இருந்த போலீசார் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் தெரியவரவில்லை.

”சமையலறையில் பயன்படுத்தக்கூடிய நீண்ட கத்தியை வையில் வைத்திருந்த படி அல்லாஹு அக்பர் என்று சத்தமிட்டபடி, என்னை சுடுங்கள் என்று பிடிபட்ட அந்த நபர்  சொல்லிக்கொண்டே ஓடும் காட்சிகள் ஆஸ்திரேலிய ஊடகங்களில் ஒளிபரப்பாகின. இந்த சம்பவத்தையடுத்து கிங் ஸ்ட்ரீட் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Next Story