உலக செய்திகள்

பறக்கும் தட்டில் பறந்து சென்ற வேற்றுகிரகவாசிகள்; திகிலூட்டும் வீடியோ காட்சி + "||" + Aliens who flew on the flying plate Terrifying video footage

பறக்கும் தட்டில் பறந்து சென்ற வேற்றுகிரகவாசிகள்; திகிலூட்டும் வீடியோ காட்சி

பறக்கும் தட்டில் பறந்து சென்ற வேற்றுகிரகவாசிகள்; திகிலூட்டும் வீடியோ காட்சி
கலிபோர்னியாவில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தோன்றும் வினோதமான வீடியோ முதல் முறையாக வெளியாகியுள்ளது.
கலிபோர்னியா

வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு.

வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வருவார்கள் என பரவலாக கூறப்படுவது உண்டு அதுபோல் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பிரகாசமிக்க பறக்கும் தட்டை ஒருவர் கண்டு உள்ளார். அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு உள்ளார்.

கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸைச் சேர்ந்த 48 வயதான பெனிஃபீல்ட் குறித்த காட்சியை பகிர்ந்துள்ளார். கதீட்ரல் நகரத்தில் உள்ள கட்டுமான தளத்தில் பாதுகாப்பு காவலராக பணிபுரிந்து கொண்டிருந்த பெனிஃபீல்ட்,​​கட்டிடத்தின் சிசிடிவி காமராவில் விந்தையான நிகழ்வைக் கண்டு அதிச்சியடைந்துள்ளார். இதுகுறித்த சம்பவம்  கடந்த ஜூலை 23, 2018 அன்று பதிவாகி உள்ளது. 

சம்பவம் குறித்து பெனிஃபீல்ட் கூறியதாவது:-

சம்பவத்தன்று நான் கட்டுமான தளத்தில் உட்கார்ந்திருந்தேன், எல்லாமே திடீரென்று வித்தியாசமாக உணர்ந்தன, என்னால் உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்க முடியவில்லை.

பின்னர் நான் மானிட்டரில் ஏதோ ஒன்றைக் கண்டேன், என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நான் அதை மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருந்தேன்.உடனடியாக அந்த சிசிடிவி காட்சியை வீடியோவாக பதிவு செய்து எனது மூத்த மகன் ஸ்கைலருக்கு அனுப்பினே், அந்த நம்பமுடியாத காட்சியை கண்ட அவன், இது அதுதானா? என கேட்டான்.

அந்த நேரத்தில் அவரது வாழ்க்கை மிகவும் பரபரப்பாக இருந்ததாக கூறிய பெனிஃபீல்ட், அதனால் தான் அப்போது அந்த காட்சிகளை வேறு யாருக்கும் காட்டவில்லை என தெரிவித்தாார். ஆனால் சமீபத்தில் மீண்டும் குறித்த வீடியோவை தனது போனில் பார்த்த பெனிஃபீலட், அது பொதுமக்களுடன் பகிரப்பட வேண்டிய ஒன்று என்று முடிவு செய்து வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் என்ன நடக்கிறது என்பதை என்னால் விளக்க முடியவில்லை, ஆனால் அது மிகவும் விசித்திரமானது. நான் அதை பலமுறை பார்த்திருக்கிறேன், அது இன்னும் எனக்கு நடுக்கத்தை தருகிறது என்று அவர் கூறினார். தொடர்புடைய செய்திகள்

1. நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றன
நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் நம் பூமியை தொடரபுகொள்ள முயற்சிக்கின்றன என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது.
2. சன்னி லியோனின் வித்தையை பார்க்க ஆசையா ...! வீடியோவை பாருங்கள்
நடிகை சன்னி லியோன் மேஜிக் செய்து டிக் டாக் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.