கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் அதிக பட்ச உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா அதிக பட்ச உயிரிழப்புகளை சந்தித்து உள்ளது.
வாஷிங்டன்:
இன்று காலை நிலவரப்படி அமெரிக்காவில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 570 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 34 ஆயிரத்து 617 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் கொரோனா தொற்றால், 4,491பேர் பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது. இது அந்நாட்டில் கொரோனா வைரசால் ஒரே நாளில் பலியான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
உலகிலேயே அதிககொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையை அமெரிக்கா கொண்டுள்ளது, அமெரிக்காவில் 677,570 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.நியூயார் நகரில் மட்டும் இந்த வாரத்தில் 3 ஆயிரத்து 778பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் கொரோனா பாதிப்பால் மொத்தம் 12 ஆயிரம் உயிர் இழப்புகளை சந்தித்து உள்ளது.
Related Tags :
Next Story






