அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதி மறுப்பதாக ஈரான் மீது ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு குற்றச்சாட்டு


அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதி மறுப்பதாக ஈரான் மீது ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 7 Jun 2020 4:30 AM IST (Updated: 7 Jun 2020 2:30 AM IST)
t-max-icont-min-icon

அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதி மறுப்பதாக ஈரான் மீது ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

நியுயார்க்,

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தனது நாடு அணு ஆயுத செயல்பாடுகளை நிறுத்தி வைத்துள்ளதாக ஈரான் தலைவர் அலி கமேனி கூறி உள்ளார். ஆனால் ஐ.நா. சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணு சக்தி நிறுவனம், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்களை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்கு ஈரான் அரசு அனுமதிப்பதில்லை, இது கவலை அளிக்கத்தக்கதாக அமைந்துள்ளது என கூறுகிறது. குறிப்பாக சந்தேகத்துக்கு இடமான 2 அணுசக்தி தளங்களை பார்வையிட 4 மாதங்களுக்கு மேலாக ஈரான் அனுமதி அளிக்காமல் இருப்பதாக அந்த அமைப்பு கூறுகிறது. செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை பொறுத்தமட்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் ஈரான் குவித்து வைத்திருப்பதாக சர்வதேச அணுசக்தி நிறுவனம் சொல்கிறது. கடந்த மே மாதம் 20-ந் தேதி நிலவரப்படி, ஈரான் 1,571 கிலோ குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாக ஒரு அறிக்கை கூறுகிறது. இது ஒப்புக்கொள்ளப்படட 300 கிலோ வரம்பை மீறுவதாகும். இதையொட்டி இந்த மாதத்தின் மத்தியில், வெளியிடப்படாத 2 அறிக்கைகள் குறித்து சர்வதேச அணுசக்தி நிறுவனம் விவாதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. அதே நேரத்தில் தனது அணுசக்தி திட்டங்கள் அமைதிக்கானவை என கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story