அமெரிக்காவின் ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது


அமெரிக்காவின் ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
x
தினத்தந்தி 2 July 2020 12:25 AM GMT (Updated: 2 July 2020 12:25 AM GMT)

அமெரிக்காவின் 3வது ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

நியூயார்க்,

அமெரிக்கா தனது விண்வெளி திட்டத்தின் ஒரு பகுதியாக ‘ஜி.பி.எஸ்.3’ (குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது.

இதன் முதல் செயற்கைக்கோள் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலும், 2வது செயற்கைக்கோள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.இந்த நிலையில் 3வது ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கேப் கனவெரல் விமானப்படை தளத்திலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘பால்கன்9’ ராக்கெட் ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் சீறிப்பாய்ந்தது. பின்னர் அந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

Next Story