ஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு


ஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 3 July 2020 12:30 AM GMT (Updated: 3 July 2020 12:30 AM GMT)

ஆஸ்திரேலியாவில் 8500 ஆண்டுகளுக்கு முன் தண்ணீருக்கு அடியில் பழங்குடிகள் வாழ்ந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலிய நாட்டில் மேற்கு கடலோரத்தில் 8,500 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியின மக்கள் வாழ்ந்ததாக கருதப்படக்கூடிய இடங்கள், தண்ணீருக்கு அடியில் 14 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அருகில் மற்றொரு இடத்தில் 2 மீட்டர் ஆழத்தில் பழங்குடியின மக்களால் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிற கல் கருவிகளையும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.

இந்த இரு இடங்களும் இன்னும் பழமையானதாக கூட இருக்க வாய்ப்பு உண்டு என்று புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

இதையொட்டி பிளிண்டர்ஸ் பல்கலைக்ககழகத்தின் பேராசிரியர் ஜோனத்தான் பெஞ்சமின் கூறுகையில், “பழங்குடியின மக்களின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் புதைபொருள் சான்றுகளில் பெருமளவு இப்போது தண்ணீருக்கு அடியில் உள்ளது” என குறிப்பிட்டார்.

இந்த ஆய்வுகள் பனியுகத்தில் இருந்து வெள்ளத்தில் மூழ்கிய பண்டைய குடியேற்றங்களை கண்டுபிடிப்பதற்கான கதவைத்திறந்து விட்டுள்ளதாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் உள்பகுதியில், 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்குடியினர் வாழ்ந்த தளங்களை ஏற்கனவே புதை பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Next Story