அமெரிக்க துணை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு


அமெரிக்க துணை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 26 Oct 2020 12:22 AM IST (Updated: 26 Oct 2020 12:22 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பரில் நடைபெற உள்ளது.  இதற்காக தீவிர பிரசாரத்தில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.  அமெரிக்கா உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதியாக மைக் பென்ஸ் இருந்து வருகிறார்.  இவரது மூத்த அரசியல் ஆலோசகராக மார்ட்டி ஆப்ஸ்ட் என்பவர் இருந்து வருகிறார்.  அரசு அதிகாரி அல்லாத இவர் உள்பட பென்சுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அவரது அலுவலகம் தெரிவித்து உள்ளது.  வருகிற நாட்களில் இந்த எண்ணிக்கை உயர கூடும் என்றும் கூறப்படுகிறது.
1 More update

Next Story