ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது - பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரிக்கை


ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின்  திட்டம் அபாயங்கள் நிறைந்தது - பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2020 10:09 AM GMT (Updated: 24 Nov 2020 10:09 AM GMT)

ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின் திட்டம் அபாயங்கள் நிறைந்தது என பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரித்து உள்ளது.

லண்டன்

ஊரடங்கிலிருந்து வெளியேறுவதற்கான இங்கிலாந்து அரசின்  திட்டம் அபாயங்கள் நிறைந்தது என்றும், இதனால் தேசிய சுகாதாரத்தில்  ஏற்படக்கூடிய பாதிப்பு ஆழ்ந்த கவலைக்குரியது என்றும் பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.

மார்ச் இறுதி வரை நீடிக்கும் புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை அறிவித்ததை அடுத்து, ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலக்கட்டத்திற்குள் இங்கிலாந்து காலடி எடுத்து வைக்கிறது என்று போரிஸ் ஜான்சன் எச்சரித்தார்.

மேலும், டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கும் திருத்தப்பட்ட பிராந்திய மூன்று அடுக்கு கட்டுப்பாட்டு முறை குறித்த விவரங்களை பிரதமர் வெளியிட்டார்.இந்த நிலையில் அபாயங்கள் நிறைந்த ஒரு திட்டத்தை பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார் என பிரிட்டிஷ் மருத்துவ சங்கம் கவுன்சில் தலைவர் டாக்டர் சாந்த் நாக்பால் கூறினார்.

மேலும் கொரோனாவுக்கு எதிராக தற்போது வரை நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை தவிர்க்கும் வகையில் மற்றும் பொதுமக்கள் செய்த கடினமான தியாகங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் பிரதமரின் புதிய திட்டம் உள்ளது என விமர்சித்துள்ளார்

புதிய நடவடிக்கைகள் அக்டோபரை விட கடுமையானவை என்று பிரதமர் கூறுகிறார், உண்மையில் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தொற்று விகிதங்கள் மற்றும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்க்கப்படுவது  மற்றும் இறப்புகள் அதிகமாக இருக்கும்.

வெளிப்புறத்தில் நடக்கும் நிகழ்வுகளில் 4,000 பேர் மற்றும் உட்புறங்களில் 1,000 பேர் வரை கலந்துக்கொள்ளலாம் என பிரதமர் அறிவித்துள்ளது மிகவும் கவலைக்குரியது. இரண்டாவது முழு ஊரங்கிற்கு வழிவகுத்த மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் திட்டம் எதனால் தோல்வியடைந்தது என்பது தற்போது நமக்கு தெரியும், அரசாங்கம் மீண்டும் அதே தவறுகளை செய்து கொரோனா பரவுவதை அதிகரிக்க வழிவகுக்கக்கூடாது என டாக்டர் சாந்த் நாக்பால் கூறினார்.

Next Story