டெல்லி விவசாயிகள் போராட்டத்தை குறிப்பிட்டு கனடா பிரதமர் கருத்து


டெல்லி விவசாயிகள் போராட்டத்தை குறிப்பிட்டு கனடா பிரதமர் கருத்து
x
தினத்தந்தி 1 Dec 2020 1:22 PM IST (Updated: 1 Dec 2020 1:26 PM IST)
t-max-icont-min-icon

உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என்று ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.


உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும் என டெல்லி  விவசாயிகள் போராட்டத்தைக் குறிப்பிட்டு கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 6 தினங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இந்நிலையில் காணொலி வாயிலாக குருநானக் ஜெயந்தி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்ட கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

"இந்தியாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் பற்றி செய்திகள் வெளிவருகின்றன. நிலமை கவலை அளிக்கும் அம்சமாக உள்ளது. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்" என ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

டெல்லி விவசாயிகளின் போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த முதல் உலகத் தலைவர்  ஜஸ்டின் ட்ரூடோ ஆவார். 
1 More update

Next Story