பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 Dec 2020 10:24 AM GMT (Updated: 17 Dec 2020 10:24 AM GMT)

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாரிஸ், 

உலகம் முழுவதும் கொரோனாவால் 7.46 கோடிக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும், பிரேசில் மூன்றாவது இடத்திலும், ரஷ்யா நான்காவது இடத்திலும், பிரான்ஸ் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் 7 நாட்கள் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டு பணிகளை கவனிப்பார் என்று அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. பிரான்சில் இதுவரை 24 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரான்சில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இந்த வாரம் தொடங்கி இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story