உலக செய்திகள்

திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய் + "||" + mother who knew the truth of her daughter came to the bride at the wedding

திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்

திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது  மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்
சீனாவில் தனது மகன் திருமணத்தில் கலந்து கொள்ள வந்த தாய் தனது வருங்கால மருமகள் உண்மையில் தனது வயிற்றில் பிறந்த மகள் என்ற உண்மையை அறிந்து கொண்டுள்ளார்.
பீஜிங்

சீனாவின் சுஜோ நகரில்  ஒரு பெண்மணியின் மகனுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.  மருமகளை வரவேற்கும் நிகழ்ச்சியில்  மருமகளின்  கையில்  இருந்த மச்சத்தைப் போன்ற ஒரு பிறவிக்குறி இருப்பதை மாமியார் கவனித்தார்.  பல ஆண்டுகளுக்கு முன், காணாமற்போன அவரது சொந்த மகளுக்கும் அதே போன்றதொரு அடையாளம் கையில் இருந்தது.

இதுகுறித்து பெண்ணின் பெற்றோரிடம் விசாரித்து உள்ளார். அப்போது தான் அந்த அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.அதன்படி மணப்பெண், உண்மையில் அவர்களுடைய வளர்ப்பு மகள் என்றும் பெற்றெடுத்த மகள் இல்லை என்றும் சம்பந்திகள் விளக்கினர்.\இதை தொடர்ந்து மணப்பெண் தனது உண்மை தாயாரை கட்டிபிடித்து அழுதார்.

மேலும் எப்படி தனது சகோதரரை திருமணம் செய்து கொள்வது என குழப்பத்திலும் கவலையிலும் ஆழ்ந்தார்.அப்போது தான் அவர் தாயார் மீண்டும் ஒரு டுவிஸ்ட் வைத்தார்.அதாவது, மகள் சிறு வயதில் காணாமல் போனதால் தனது மகனான இளைஞனை தத்தெடுத்ததாகவும், அவர் தனது வயிற்றில் பிறந்தவர் இல்லை எனவும் கூறினார்.

இதனால் இருவரும் இரத்த சம்மந்தமான உடன்பிறப்புகள் இல்லை என்பதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் பிரச்சினை இல்லை என கூறிய நிலையில் மணப்பெண் மகிழ்ச்சியடைந்தார்.இதன்பின்னர் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் பிறந்த ஆண் குழந்தை
ஈராக்கில் மனித வரலாற்றில் முதன் முறையாக 3 பிறப்புறுப்புகளுடன் ஆண் குழந்தை பிறந்து உள்ளது.
2. அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிப்பு
அழகான ஆண்களை கண்டால் மயங்கி விழும் பெண்; விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு உள்ள அதிசய பெண்
3. மாடியில் இருந்து விழுந்தவரை காப்பாற்றும் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சம்பவம் -வீடியோ
திரைப்படத்தை மிஞ்சும் வகையில் சாகச சம்பவம் ஒன்றை நிகழ்த்தி கேரளாவில் பாபு என்பவர் பிரபலமடைந்து உள்ளார்.
4. கர்ப்பிணி பெண்ணை கொலை செய்து அவரது வயிற்றில் இருந்த குழந்தையை திருடிய பெண்
பிரேசிலில் எட்டு மாத கர்ப்பிணிப்பெண் ஒருவர் குளியலறையில் இறந்துகிடக்க, அவரது வயிற்றிலிருந்த குழந்தை மாயமாகியிருந்தது.
5. சினிமா தியேட்டர்களை திறக்க கோரி விருது வழங்கும் மேடையில் நடிகை நூதன போராட்டம்
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது தியேட்டர்களை அரசாங்கம் பல மாதங்களாக மூடியதை எதிர்த்து பாரிஸில் நடைபெற்ற சீசர் விருது வழங்கும் விழாவின் போது பிரெஞ்சு நடிகை கொரின் மசீரோ மேடையில் நிர்வாணமாக வெளியேறினார்.