உலகில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் முதன் முதலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்


Image courtesy : dailymail.co.uk
x
Image courtesy : dailymail.co.uk
தினத்தந்தி 1 July 2021 11:45 AM IST (Updated: 1 July 2021 11:45 AM IST)
t-max-icont-min-icon

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பிய நாடான லாட்வியாவில் இருந்த ஒரு நபருக்குதான் முதன் முதலில் தொற்று நோய் இருந்துள்ளதாக, அதற்கான ஆதாரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

13-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவையே இந்த பிளேக் தொற்று நோய் புரட்டிப் போட்டது. 1347-ஆம் ஆண்டு முதல் 1351-ஆம் ஆண்டு வரை தீவிரமாக பரவிய இந்த நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதுவரை உலகில் எந்த போரிலும் ஏற்படுத்திராத உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என பிரிட்டானிக்கா இணையதளம் கூறி உள்ளது.

ஐரோப்பாவின் கிட்டத்தட்ட பாதி மக்கள் இந்த நோயால் அழிந்து போனார்கள்.பின்னர் பல நூற்றாண்டுகளுக்கு அவ்வப்போது இந்த நோய் பரவி, லட்சக்கணக்கானோரை பலி வாங்கியது.

சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன், ஐரோப்பிய நாடான லாட்வியாவில் இருந்த ஒரு நபருக்குதான் முதன் முதலில் இந்த தொற்று நோய் இருந்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுவரை உலகிலேயே பிளேக் நோயால் உயிரிழந்த பழமையான நபர் இவர்தான்" என்கிறார் ஜெர்மனியின் கீல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பென் கிராஸ் கியோரா.

கண்டெடுக்கப்பட்ட இந்த எலும்புக்கூடு  5,300 ஆண்டுகள் பழமையானவை என்று அவர் கூறுகிறார்.

பால்டிக் பெருங்கடலுக்குள் பாயும் சலக் நதிக்கரையோராத்தில் உள்ள மயானத்தில், மூன்று வேறு நபர்களுடன் இந்த நபரும் புதைக்கப்பட்டுள்ளார்.

நான்கு உடல்களின் எலும்புகள் மற்றும் பற்களை எடுத்து பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று இருக்கிறதா என்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தனர்.

அதில் ஒரு வேட்டைக்காரருக்கு பிளேக் நோயின் பழமையான திரிபால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.அவர் அணில் போன்ற ஏதோ ஒரு கொறிக்கும் பிராணியால் கடிபட்டிருக்கலாம். 

காலப்போக்கில் இந்த பாக்டீரியா அதிகளவில் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி, புபோனிக் பிளேகாக மாறியிருக்கக்கூடும்.இந்தக் கொள்ளை நோய் இப்போதும் காணப்பட்டாலும், ஆரம்பத்தில் கண்டறியப்பட்டால் ஆண்டிபயோட்டிக் மருந்துகளால் குணப்படுத்த முடியும்.

சமீப காலங்களில் இந்த தொற்று பாதிப்பு மிக குறைவாக பதிவாகியிருந்தலும், வரலாற்றில் இந்த நோய் ஏற்படுத்தியுள்ள சுவடுகள் வலி மிகுந்தவை என்பதால் அது குறித்த அச்சம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
1 More update

Next Story