கிளப்பில் விடிய விடிய ஆட்டம்: வைரலான வீடியோ - மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர்!


கிளப்பில் விடிய விடிய ஆட்டம்: வைரலான வீடியோ - மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட பிரதமர்!
x
தினத்தந்தி 11 Dec 2021 7:42 AM GMT (Updated: 11 Dec 2021 7:42 AM GMT)

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் கொரோனா விதிமுறைகளை மீறி இரவு நேர கிளப்பில் விடிய விடிய நேரத்தை கழித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால் பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஹெல்சின்கி,

பின்லாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரிக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அந்நாட்டின் பிரதமர் சன்னா மரின் ( வயது 36 ) அதனை சிறிதும் பொருட்படுத்தாமல் அதிகாலை 4 மணி வரை ஹெல்சின்கியில் உள்ள  இரவு நேர கிளப்பில் விடிய விடிய நடனமாடி பொழுதை கழித்துள்ளார்.

அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் பின்லாந்து நாட்டின் பிரதமர் சன்னா மரின் கொரோனா விதிமுறைகளை மீறி இரவு நேர கிளப்பில் விடிய விடிய நேரம் கழித்தற்காக பகிரங்கமாக மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  பிரதமரின் இந்த செயல் மிகவும் வேதனைபடுத்தி உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

Next Story