தென்னாப்பிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா: விரைவில் குணமடைய மோடி வாழ்த்து

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா விரைவில் குணமடைய மோடி வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி,
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவின் உடல்நலத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. தற்போது அவர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவால் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா விரைவில் குணமடைய பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். அவர் தன்னுடைய டுவிட்டரில், "நீங்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் நண்பரே, ஜனாதிபதி சிரில் ராமபோசா" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Wishing you a speedy recovery my friend, President @CyrilRamaphosa. https://t.co/mYudl71Dmz
— Narendra Modi (@narendramodi) December 13, 2021
Related Tags :
Next Story