கேமரூனில் வர்த்தக கண்காட்சியில் குண்டுவெடிப்பு; 10 பேர் காயம்


கேமரூனில் வர்த்தக கண்காட்சியில் குண்டுவெடிப்பு; 10 பேர் காயம்
x
தினத்தந்தி 13 Dec 2021 11:55 PM IST (Updated: 13 Dec 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

கேமரூன் நாட்டில் வர்த்தக கண்காட்சியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.



யாவோவண்டே,

கேமரூன் நாட்டின் தென்மேற்கே ஆங்லோபோன் பகுதியில் பியூவா என்ற இடத்தில் வர்த்தக கண்காட்சி ஒன்று நடந்து வந்தது.  இந்நிலையில், கூட்டம் அதிகம் இருந்த அந்த பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்து உள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 10 பேர் காயம் அடைந்து உள்ளனர்.  அவர்கள் உடனடியாக உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  எனினும், சிலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பிரிவினைவாத போராளிகள் பொறுப்பேற்று கொண்டனர்.  இதனை சமூக ஊடகம் வழியே அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

1 More update

Next Story