வந்துவிட்டது சூப்பர் ஸ்கூட்டர்... பலூனை போல் காற்றை நிரப்பி பயணிக்கலாம்


வந்துவிட்டது சூப்பர் ஸ்கூட்டர்... பலூனை போல் காற்றை நிரப்பி பயணிக்கலாம்
x
தினத்தந்தி 17 Dec 2021 10:31 AM GMT (Updated: 17 Dec 2021 10:31 AM GMT)

வித்தியாசமான கண்டுபிடிப்புகளில் உலகநாடுகளுக்கு ஜப்பான் - ஒரு முன்னோடியான நாடாக திகழ்கிறது.

டோக்கியோ,

வித்தியாசமான கண்டுபிடிப்புகளில் உலகநாடுகளுக்கு ஜப்பான் - ஒரு முன்னோடியான நாடாக திகழ்கிறது. இருந்தாலும் கூட ஜப்பானின் சில அசாதாரண கண்டுபிடிப்புகளை பார்க்கும் போது ஜப்பானியர்களின் அறிவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

இந்தநிலையில், ஜப்பானில் காற்றடைத்து ஓட்டிச்செல்லும் பொய்மோ என்று அழைக்கப்படும் புதிய வகை ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர்கள் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கையில் எடுத்து சென்று பலூனைப்போல் காற்றை நிரப்பி பயணிக்கலாம் என கூறப்படுகிறது.

Next Story