டிக்டாக் சேலஞ்ஜ்: பள்ளி வளாகத்தில் நடந்த பயங்கரம்- 4 மாணவர்கள் பலி


டிக்டாக் சேலஞ்ஜ்: பள்ளி வளாகத்தில் நடந்த பயங்கரம்- 4 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 19 Dec 2021 7:01 AM GMT (Updated: 19 Dec 2021 7:01 AM GMT)

டிக்டாக் ஆப்-யில் பள்ளிகளில் மாணவர்கள் பிற மாணவர்களை துப்பாக்கியால் சுடும் சேலஞ்ஜ் வைரலாகி வருவதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்கா ,

கடந்த 2016 ஆம் ஆண்டு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப் டிக்டாக் . பாடல் மற்றும் நடனம் சார்ந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆப் அறிமுகமாகிய சில மாதங்களிலேயே உலகெங்கும் பெரும் வரவேற்பை பெற்றது. உலககெங்கும் உள்ள பலரது மொபைல் போன்களில் பதிவிறக்கப்பட்ட இந்த டிக்டாக் பலரையும் அடிமையாக்கியது.

இது அடுத்த கட்டமாக டிக்டாக்  சேலஞ்ஜ் என்ற பெயரில் மேலும் பிரபலமாகியது. அதாவது ஒருவர் செய்து பதிவேற்றும் வீடியோ போன்றே அதே பார்ப்பவர்களும் செய்ய தொடங்கினர். நடனத்தில் தொடங்கிய இந்த டிக்டாக்  சேலஞ்ஜ் பின்னர் அபாயகரமான ஒன்றாக உருவெடுத்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்த  பல நாடுகள் இந்த ஆப்-யை தங்கள் நாடுகளில் தடை செய்தது. இந்தியாவிலும் இந்த ஆப்-யை மத்திய அரசு தடை செய்தது.

இருப்பினும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த ஆப் இன்றும் செயல் பட்டுவருகிறது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவை அச்சுறுத்தும் டிக்டாக் சேலஞ்ஜ் ஒன்று பலரையும் அங்கு கவலையில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் மெக்ஸிகோ மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் துப்பாக்கிசுடு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அந்த துப்பாக்கிசூட்டை நடத்தியது அந்த பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன்.
இந்த சம்பவத்தில் 4 மாணவர்கள் பலியாகினர் மேலும் 7 பேர் பலத்த காயமடைந்தனர்.

இது குறித்து போலீசார் பள்ளிகளில் நடத்திய அதிரடி நடவடிக்கைளில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது டிக்டாக்  ஆப்-யில் பள்ளிகளில் மாணவர்கள்  பிற மாணவர்களை சுடும் சேலஞ்ஜ் வைரலாகி வருவதாக தெரியவந்துள்ளது. இது குறித்த வீடியோகளை பார்த்தே அந்த மாணவனும் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது . 

இது குறித்து டிக்டாக் நிறுவனம் ," அவ்வாறு எந்த ஒரு சேலஞ்களும் பரவவில்லை என மறுத்துள்ளது ".தற்போது அமெரிக்காவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Next Story