தடுப்பூசி பாதுகாப்பு 3 மாதங்களில் மங்குகிறது - ஆய்வுத்தகவல்


தடுப்பூசி பாதுகாப்பு 3 மாதங்களில் மங்குகிறது - ஆய்வுத்தகவல்
x
தினத்தந்தி 22 Dec 2021 12:21 AM GMT (Updated: 22 Dec 2021 12:21 AM GMT)

தடுப்பூசி பாதுகாப்பு 3 மாதங்களில் மங்குகிறது என்று ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன்,

இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கிற பாதுகாப்பு, 2 டோஸ் செலுத்திமுடித்த 3 மாதங்களில் மங்க தொடங்கி விடுகிறது என்று இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

இதே தடுப்பூசியைத்தான் இந்தியாவில் புனேயில் சீரம் நிறுவனம், கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்குகிறது. ஆக்ஸ்போர்டு, அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட ஸ்காட்லாந்தின் 20 லட்சம் பேர், பிரேசிலின் 4 கோடியே 20 லட்சம் பேர் தரவுகளை ஆய்வு செய்துதான் இந்த லேன்செட் பத்திரிகை ஆய்வுத்தகவல் வெளியாகி உள்ளது.

ஸ்காட்லாந்தில் இந்த தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக்கொண்ட பின்னர் 2 வாரங்களுடன் ஒப்பிடுகிறபோது, 5 மாதங்களான நிலையில் கொரோனா பாதித்து ஆஸ்பத்திரி சேர்க்கை அல்லது இறப்பு 5 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story