வங்கதேசம்: பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலி.!


வங்கதேசம்: பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் பலி.!
x
தினத்தந்தி 24 Dec 2021 3:04 PM IST (Updated: 24 Dec 2021 6:39 PM IST)
t-max-icont-min-icon

வங்கதேசத்தில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

டாக்கா,

வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 250 கி.மீ தொலைவில் உள்ள ஜலகதி மாவட்டத்தில் உள்ள சுகந்தா நதியில் எம்வி அவிசான் என்ற பயணிகளை ஏற்றிச்செல்லும் படகு ஒன்று பர்குனா நோக்கி சென்றுகொண்டு இருந்தது. 

அதிகாலை 3 மணியளவில் படகு தட்டாபியா பகுதியை அடைந்த போது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ படகின் மற்ற பகுதிகளில் வேகமாக பரவியது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படை வீரர்கள் படகு மூலம் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தகவலறிந்த அப்பகுதி மக்களும் ஆற்றங்கரையில் திரண்டனர். தீயணைப்பு வீரர்கள் போராடி 2 மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த தீ விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிகாலை நேரம் கடுமையான பனிமூட்டம் காரணமாக மீட்புப்பணிகள் சிக்கலானது. இந்த தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் 200 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஷெர்-இ-பங்களா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  

மேலும், படகின் எஞ்சின் அறையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். 

1 More update

Next Story