கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி: போப் ஆண்டவர் பிரார்த்தனை


கொரோனா தொற்றுக்கு முற்றுப்புள்ளி: போப் ஆண்டவர் பிரார்த்தனை
x
தினத்தந்தி 25 Dec 2021 7:42 PM GMT (Updated: 25 Dec 2021 7:42 PM GMT)

கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

வாடிகன் சிட்டி, 

ஏசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை நடத்தினார்.

அப்போது அவர் 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க பிரார்த்தனை செய்தார்.

மேலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காவும், தனிமையில் இருக்கும் முதியவர்களுக்காகவும், நோய்வாய்ப்பட்டவர்களை கவனிப்பதில் தாராளமாக தங்களை அர்ப்பணிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்காகவும் ஆறுதல் மற்றும் அரவணைப்பு வேண்டி அவர் பிரார்த்தித்தார். 

அதனை தொடர்ந்து அவர் தேவாலயத்தின் பால்கனியில் நின்றபடி உலக மக்களுக்கு கிறிஸ்துமஸ் உரையை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, ஏழைகளுக்கான தடுப்பூசிகள் மற்றும் உலகின் மோதல்களை தீர்ப்பதற்கான உரையாடல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.

Next Story