ஜெர்மனியில் 70 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Dec 2021 4:27 PM GMT (Updated: 26 Dec 2021 4:27 PM GMT)

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,720 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெர்லின்,

ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 720 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டில் இந்த தொற்றுக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 70 லட்சத்து 3 ஆயிரத்து 196 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 15 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதுவரை அங்கு 1 லட்சத்து 11 ஆயிரத்து 040 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனா பாதிப்பில் இருந்து 61,13,500 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 7,78,656 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


Next Story