பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுக்கு ஐ. நா. பொதுச்செயலாளர், ஜோ பைடன் இரங்கல்


பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுக்கு  ஐ. நா. பொதுச்செயலாளர், ஜோ பைடன் இரங்கல்
x
தினத்தந்தி 27 Dec 2021 7:16 PM GMT (Updated: 27 Dec 2021 7:16 PM GMT)

பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுக்கு ஐ. நா. பொதுச்செயலாளர், ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்,

தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசை வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டுட்டு நேற்று காலமானார். அவருக்கு வயது 90.

அவரது மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,  நிறவெறிக்கு எதிராக போராடி நோபல் பரிசு பெற்ற தென்ஆப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் மறைவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே டெஸ்மண்ட் டுட்டுவின் இறுதிச்சடங்கு வருகிற 1-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story