உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 28.31 கோடியாக உயர்வு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Dec 2021 2:13 AM GMT (Updated: 29 Dec 2021 2:13 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25.17 கோடியை தாண்டியது.

ஜெனிவா, 

தென்ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் பரவும் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு உலகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28.31 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,31,62,709 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,17,94,747 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 30 ஆயிரத்து 324 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,59,37,638 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 89,097 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  - பாதிப்பு - 5,41,48,544, உயிரிழப்பு -  8,41,992, குணமடைந்தோர் - 4,13,25,110
இந்தியா   -    பாதிப்பு - 3,48,08,067, உயிரிழப்பு -  4,80,320, குணமடைந்தோர் - 3,42,43,945
பிரேசில்   -    பாதிப்பு - 2,22,54,706. உயிரிழப்பு -  6,18,723, குணமடைந்தோர் - 2,14,14,318
இங்கிலாந்து- பாதிப்பு - 1,23,38,676, உயிரிழப்பு - 1,48,021, குணமடைந்தோர் - 1,01,79,898
ரஷ்யா            - பாதிப்பு -  1,04,37,152, உயிரிழப்பு - 3,06,090, குணமடைந்தோர் - 93,37,447

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி - 93,65,399
பிரான்ஸ்  - 93,26,258
ஜெர்மனி - 70,59,346
ஈரான்  -  61,88,857
ஸ்பெயின் - 60,32,297
இத்தாலி - 57,56,412
அர்ஜெண்டினா - 55,14,207
கொலம்பியா - 51,32,277
இந்தோனேசியா - 42,62,157
போலந்து - 40,64,715


Next Story