ஒமைக்ரான் பரவல்: இங்கிலாந்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம் + "||" + Omicron diffusion: intensification of booster dose vaccination operations in the UK
ஒமைக்ரான் பரவல்: இங்கிலாந்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்
ஒமைக்ரான் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
லண்டன்,
இங்கிலாந்தில் சமீப நாட்களாக கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவாக அங்கு தினசரி பாதிப்பு லட்சத்தில் பதிவாகி வருகிறது.
அந்த வகையில் நேற்று ஒரு நாளில் அங்கு 1 லட்சத்து 29 ஆயிரத்து 471 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று அதிகரித்து வந்தாலும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்பு குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசி என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதோடு கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் ஒமைக்ரானுக்கு எதிராக போராடும் எனவும் அவர் நம்புகின்றனர். இதனால் இங்கிலாந்தின் கொரோனா தடுப்பூசி திட்டக்குழு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது. இது குறித்து அந்த திட்டக்குழுவின் தலைவர் எமிலி லாசன் கூறுகையில், “நாங்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை தொடர்பு கொண்டு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து, ஆரோக்கியமான பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.