இறுதி இலக்கை அடைந்த ‘ஜேம்ஸ்வெப்’ தொலைநோக்கி...!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 25 Jan 2022 10:25 PM GMT (Updated: 2022-01-26T04:06:52+05:30)

‘ஜேம்ஸ்வெப்’ தொலைநோக்கி, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் தனது இறுதி இலக்கை அடைந்தது.

வாஷிங்டன், 

உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான ‘ஜேம்ஸ்வெப்’ தொலைநோக்கியை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்த மாதம் 25-ந்தேதி விண்ணில் செலுத்தியது. 

பிரெஞ்சு கயானாவில் உள்ள கோவ்ரு விண்வெளி நிலையத்திலிருந்து ஜெர்மனியின் ‘அரியேன்' ராக்கெட் மூலம் ஜேம்ஸ்வெப் ஏவப்பட்டது. பிரபஞ்சத்தின் முதல் நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களின் பிறப்பைக் கண்டறிவதே ஜேம்ஸ்வெப் தொலையோக்கியின் முதன்மை பணியாகும்.

இந்த நிலையில், ஜேம்ஸ்வெப் தொலையோக்கி தன்னுடைய இறுதி இலக்கான, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள காஸ்மிக் பார்க்கிங் என்கிற இடத்தை நேற்று வெற்றிகரமாக அடைந்ததாக நாசா அறிவித்துள்ளது. இதை பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் பணிக்கு ஒரு படி நெருக்கமாக உள்ளது என்று நாசா குறிப்பிட்டுள்ளது.


Next Story