2 வது முறையாக பாக்தாத் விமான நிலையத்தில் ராக்கெட் தாக்குதல்..!

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது 2-வது முறையாக இன்றும் ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது.
பாக்தாத்,
கடந்த வாரம் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் அடுத்தடுத்து 6 ராக்கெட் குண்டுகளை வீசினர். இந்த தாக்குதலில், விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈராக் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில் இன்றும் ஈராக் தலைநகர் பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தின் மீது இரண்டாவது முறையாக ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஏறக்குறைய 5 ராக்கெட் குண்டுகள் விமான நிலையத்தை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story