பிலிப்பைன்சில் லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது; 9 பேர் உயிரிழப்பு


பிலிப்பைன்சில் லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது; 9 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 11 Feb 2022 2:35 AM GMT (Updated: 11 Feb 2022 2:35 AM GMT)

பிலிப்பைன்சின் தெற்கே சிறிய லாரி ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.மணிலா,


பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் ஜாம்போவாங்கா டெல் நார்டே மாகாணத்தில் பலிகுயியான் நகரில் சிறிய லாரி ஒன்று சரக்கு மற்றும் சிலரை ஏற்றி கொண்டு சென்றுள்ளது.  இந்த நிலையில், லாரி திடீரென சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கிற்குள் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்து உள்ளனர்.  7 பேர் காயமடைந்து உள்ளனர்.  லாரியின் பிரேக் சரியாக பிடிக்காமல் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு உள்ளது என முதல் கட்ட விசாரணை தெரிவிக்கின்றது.


Next Story