சுவீடனில் அற்புத நிகழ்வு.. பச்சை நிறமாய் மாறிய வானம்
‘சுவீடன் அரோரா’ என்னும் அற்புத வானியல் நிகழ்வு சுவீடன்-பின்லாந்து நாடுகளுக்கு இடையே தோன்றியது.
ஸ்டாக்ஹோம்,
வடக்கு ஒளி என்றும் துருவ ஒளி என்றும் அழைக்கப்படும் ‘சுவீடன் அரோரா’ என்னும் அற்புத வானியல் நிகழ்வு சுவீடன்-பின்லாந்து நாடுகளுக்கு இடையேயான எல்லையில் உள்ள பஜாலா பகுதியில் தோன்றியது. சுவீடன் நாட்டு வானத்தை அலங்கரித்த இந்த அபூர்வ ஒளியானது, வண்ணங்கள் நடனமாடுவதைப் போல் தோற்றமளித்து காண்போரை மெய் மறக்கச் செய்தது.
இந்த சுவீடன் அரோரா- ‘வடக்கு ஒளி’ என்பது சூரியனில் இருந்து மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் பூமியின் வளிமண்டலத்தில் மோதும்போது உருவாகும் ஒரு தனித்துவமான இயற்கை நிகழ்வு ஆகும்.வடக்கு ஒளியானது பிங்க், பச்சை மற்றும் ஊதா நிறங்களிள் கோடுகளாக வானில் தென்படும்.
செப்டம்பர் மாதம் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இந்த நிகழ்வை சுவீடன் நாட்டில் காணலாம்.மாலை 6 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை இந்த வானியல் அற்புதத்தை தெளிவாக காணலாம்.
சமீபத்தில் சுவீடன் பின்லாந்து நாடுகளுக்கு இடையேயான எல்லையில் உள்ள பஜாலா பகுதியில் தோன்றிய இந்த அரோராவை மக்கள் வெகுவாக ரசித்துச் சென்றனர்.
Related Tags :
Next Story