நெதர்லாந்தை தாக்கிய யூனிஸ் என்ற சக்திவாய்ந்த புயல்: 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து


நெதர்லாந்தை தாக்கிய யூனிஸ்  என்ற  சக்திவாய்ந்த புயல்:  150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
x
தினத்தந்தி 18 Feb 2022 6:44 PM GMT (Updated: 18 Feb 2022 6:44 PM GMT)

நகரில் இருந்து புறப்பட இருந்த 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.

யூனிஸ் புயல் இங்கிலாந்தைத் தாக்கியதால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  அங்கு கடந்த 32 வருடங்களில் வீசும் மிக மோசமான புயல் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில்,  நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் யூனிஸ் என்கிற சக்திவாய்ந்த புயல் தாக்கும் என அந்த நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, அந்த நகரில் இருந்து புறப்பட இருந்த 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்துசெய்யப்பட்டன.

Next Story