உக்ரைனில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை - ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல்


உக்ரைனில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை - ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Feb 2022 7:53 PM GMT (Updated: 22 Feb 2022 7:53 PM GMT)

உக்ரைனில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்று ஐ.நா.சபையில் இந்தியா வலியுறுத்தி உள்ளது.

நியூயார்க்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரத்தில் நேற்று முன்தினம் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஐ.நா.வுக்கான இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசினார். அப்போது அவர் கூறும்போது, "உக்ரைனில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களும், பொதுமக்களும் உள்ளனர். அவர்களின் நல்வாழ்வுதான் எங்களுக்கு முன்னுரிமை" என்று கூறினார். 

தொடர்ந்து அவர் பேசும்போது, " ரஷிய கூட்டமைப்புடன் உக்ரைன் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு மோசமாகும் வாய்ப்பு உள்ளது. அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும். 

அனைத்து நாடுகளின் நியாயமான பாதுகாப்பு நலன்களை கணக்கில் கொள்ள வேண்டும். நீண்டகால அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதும், பதற்றங்களை தணிப்பதும் உடனடியாக முன்னுரிமை அளிக்க வேண்டிய விஷயங்கள் ஆகும்" என்று வலியுறுத்தினார்.

Next Story