உக்ரைன்: நேரடி ஒளிபரப்பில் பத்திரிகையாளரின் தலைக்கு மேல் பறந்து சென்ற “சூப்பர்சோனிக் ஏவுகணை”

ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்து தனது நேரடி ஒளிபரப்பை பகிர்ந்து கொள்ளும் போது ஒரு சூப்பர்சோனிக் ஏவுகணை அவரது தலைக்கு மேல் பறந்து சென்றது.
கீவ்,
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன.
இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷிய வீரர்கள் நுழைந்துள்ளனர் என புதின் கூறியுள்ளார். உக்ரைனை ஆக்கிரமிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் புதினின் அறிக்கைக்குப் பிறகு, உக்ரைனின் தலைநகரான கீவ் மற்றும் பல நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன..உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது.
ரஷியாவில் இருந்து உக்ரைனை நோக்கி ஏவுகணைகள் பாய்ந்து செல்லும் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலிய பத்திரிகையாளரான பிரையன் வில்சன் உக்ரைனின் கீவ் பகுதியில் இருந்து உக்ரைனில் நிலவும் சூழ்நிலை குறித்து தனது நேரடி ஒளிபரப்பை டுவிட்டரில் பகிர்ந்து கொள்ளும் போது ஒரு ஏவுகணை அவரது தலைக்கு மேல் பறந்து சென்றது.
Video absolutamente loco de los periodistas @brycewilsonau en #Kramatorsk, #Ucrania. #UkraineRussiaCrisispic.twitter.com/simh7UKL5e
— Wojtek | 🕯️19 de marzo🕯️ (@Anne__Boonchuy) February 24, 2022
இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகியுள்ளது, வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை குவித்துள்ளது.
Related Tags :
Next Story






