உக்ரைன் - ரஷ்யா போருக்கு அமெரிக்காவே காரணம் ... வடகொரியா சாடல்...!


உக்ரைன் - ரஷ்யா போருக்கு அமெரிக்காவே காரணம் ... வடகொரியா சாடல்...!
x
தினத்தந்தி 27 Feb 2022 7:04 AM GMT (Updated: 27 Feb 2022 7:04 AM GMT)

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவே மூல காரணம் என்று வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

சியோல்,

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரில் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர் என உக்ரைன் சுகாதார மந்திரி தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவே மூல காரணம்  என்று வட கொரியா குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து  வட கொரியா வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை தென்கொரியாவின் ஆராச்சியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அமெரிக்கா, ரஷ்யாவின் நியாயமான கோரிக்கையை புறக்கணித்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போருக்கு அமெரிக்காவே மூல காரணம். உக்ரைன்  விவகாரத்தில் அமெரிக்கா இரண்டு மனப்பான்மையை  கொண்டுள்ளது. அமைதியை நிலைநிறுத்த முயற்சிப்பதாக கூறி  மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் அமெரிக்கா அதிகமாக தலையிடுகிறது. அமெரிக்கா உலகத்தை  ஆட்சி செய்த காலம் போய்விட்டது.

அது மட்டுமின்றி மற்ற நாடுகள் தங்கள் நாட்டின்  தற்காப்புக்காகவும் தேசிய பாதுகாப்புகவும்  எடுக்கப்படும் நடவடிக்கைகளை அமெரிக்கா கண்டிக்கும் செயல் தவறானது. உங்களிடம் வலிமை இல்லை என்றால் நீங்கள் தான் இறுதியில் துன்பம் அனுபவிப்பவராக இருக்க போகிறீர்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story