உக்ரைன் நாட்டிற்கு ரஷ்ய நடிகை லியா நிதியுதவி...!

உக்ரைன் நாட்டிற்கு ரஷ்ய நடிகை லியா என்பவர் 10,000 டாலர் நிதியுதவி வழங்கியுள்ளார்.
மாஸ்கோ,
உக்ரைன் மீது 4-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து, உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை விரிவு படுத்த புதின் நேற்று உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் நுழைந்து, அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு ரஷ்ய நடிகை லியா அகெட்ஜகோவா என்பவர் 10,000 டாலர் நிதியுதவி வழங்கியுள்ளார். மேலும் உக்ரைனுக்கு பொதுமக்களும் நிதியுதவி வழங்க வேண்டுகோள் விடுத்தும் நடந்த சம்பவங்களுக்கு ரஷ்ய நடிகை லியா மன்னிப்பு கோரியுள்ளார்.
ரஷ்ய நடிகை லியா அகெட்ஜகோவா ஒரு சோவியத் மற்றும் ரஷ்ய திரைப்படம், மேடை மற்றும் குரல் நடிகை ஆவார். அவர் 1994 இல் ரஷ்யாவின் மக்கள் கலைஞர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். மேலும் சிறந்த துணை நடிகைக்கான இரண்டு நிகா விருதுகளையும் 2014 நிகா கௌரவப் பரிசையும் நடிகை லியா பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story