நடு ஆற்றில் பனிக்கட்டியின் மேலே தத்தளித்து கொண்டிருந்த நாய்... லாவகமாக காப்பாற்றிய வீரர்!
Image courtesy:Facebook/Wyandotte Police Department - Michiganநடு ஆற்றில் ஒரு லேப்ரடூடுள் வகை நாய் மாட்டிக்கொண்டது. பனியால் உறைந்து போன ஆற்றில், பனிக்கட்டியின் மேலே அந்த நாய் தத்தளித்து கொண்டிருந்தது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் பகுதியில் நடு ஆற்றில் ஒரு லேப்ரடூடுள் வகை நாய் மாட்டிக்கொண்டது. பனியால் உறைந்து போன ஆற்றில், பனிக்கட்டியின் மேலே அந்த நாய் தத்தளித்து கொண்டிருந்தது.
இது குறித்த தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்புபடையினர் மற்றும் போலீசார் நாய் லூசியை பத்திரமாக மீட்டனர்.
அவர்கள் கயிறுகட்டி பலவித முயற்சிகளை செய்து அந்த நாயை பத்திரமாக மீட்டனர்.
இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து, வியாண்டோட் பகுதி போலீஸ் முதன்மை அதிகாரி கூறுகையில், “அக்கம்பக்கத்தினர் நாய் சிக்கியுள்ளதை கண்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் தான் நாயை மீட்க முடிந்தது” என்று கூறினார்.
Related Tags :
Next Story






