ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 4-வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி


ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 4-வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 25 March 2022 9:11 PM GMT (Updated: 25 March 2022 9:11 PM GMT)

ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 4-வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி

கான்பெர்ரா, 

நமது நாட்டில் கொரோனாவுக்கு எதிராக தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3-வது டோஸ் தடுப்பூசி, முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் போடப்படுகிறது.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் குளிர்காலத்துக்கு முன்னதாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு 4-வது டோஸ் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இது 2-வது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஆகும்.

65 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட பழங்குடியினருக்கும், ஊனமுற்றோர் பராமரிப்பு இல்லங்களில் இருப்போருக்கும், நோய் எதிர்ப்புச்சக்தி குறைபாடு உள்ள யாவருக்கும் இந்த தடுப்பூசி டோஸ் போடப்படும்.

ஏப்ரல் 1-ந் தேதி முதல் இந்த தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.

ஆஸ்திரேலியாவுக்கு செல்வோர் கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய அரசு நேற்று அறிவித்தது.

Next Story