ஆண்கள் துணையின்றி வந்ததால் பெண்களை விமானங்களில் அனுமதிக்க மறுத்த தலீபான்கள்
Photo Credit:APதலீபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இஸ்லாமாபாத்,
ஆப்கானிஸ்தானை கடந்த 7 மாதங்களாக ஆட்சி செய்து வரும் தலீபான்கள் பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அண்மையில் 6-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகள் கல்வி கற்க தடை விதித்த தலீபான்கள் திறக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே பள்ளிகளை மூடி மாணவிகளை வீட்டுக்கு திருப்பி அனுப்பினர்.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ஆண்கள் துணையில்லாமல் வந்ததால் பெண்களை விமானங்களில் ஏற விடாமல் தலீபான்கள் திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி விமான நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் ஏறுவதற்காக வெள்ளிக்கிழமை காபூல் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த டஜன் கணக்கான பெண்களுக்கு ஆண் பாதுகாவலர்கள் இல்லை என்பதால் அவர்கள் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பெண்களில் சிலர் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் கனடா, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தான் வந்தவர்கள் ஆவர்” என்றார்.
Related Tags :
Next Story






