ரஷிய குண்டு மழையில் பற்றி எரியும் மரியுபோல்... 5 ஆயிரம் பேர் பலி


ரஷிய குண்டு மழையில் பற்றி எரியும் மரியுபோல்... 5 ஆயிரம் பேர் பலி
x
தினத்தந்தி 29 March 2022 11:45 AM GMT (Updated: 29 March 2022 11:45 AM GMT)

ரஷிய குண்டு மழையில் மரியுபோல் நகரில் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என உக்ரைன் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


கீவ்,



உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போர் முடிவில்லாமல் நீண்டு கொண்டே இருக்கிறது.  ஏறக்குறைய 4 வாரங்களுக்கும் கூடுதலாக ரஷிய படைகளின் உக்கிரமான தாக்குதல்களில் உக்ரைன் நகரங்கள் அனைத்தும் உருக்குலைந்து வருகின்றன.

உக்ரைனில் ரஷிய படைகளின் தொடர் தாக்குதல்களால் துறைமுக நகரான மரியுபோல் அழிவின் விளம்புக்கு சென்றுள்ளது என்றும் அந்த நகரில் சுமார் 1.60 லட்சம் பேர் சிக்கியுள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே அங்குள்ள அனைவரும் வெளியேற வேண்டும் என அந்நகர மேயர் வாடிம் போய்சென்கோ தெரிவித்துள்ளார்.  நேற்றைய நிலவரப்படி மரியுபோல் நகரில் சுமார் 1,60,000 பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் உணவு, குடிநீர், மின்சாரம் என அடிப்படை வசதிகள் எதுவுமின்றி பரிதவித்து வருகின்றனர் என வாடிம் போய்சென்கோ கூறியுள்ளார்.  பலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

இதுபற்றி உக்ரைன் நாட்டின் தி கீவ் இன்டிபெண்டன்ட் என்ற உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ரஷியாவின் குண்டுவீச்சு மற்றும் வான்வழி தாக்குதலில் 210 குழந்தைகள் உள்பட 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர் என்று உக்ரைன் அதிகாரிகள் மதிப்பிட்டு உள்ளனர்.  கடந்த 1ந்தேதியில் இருந்து தென்கிழக்கு துறைமுக நகரான மரியுபோலை ரஷிய படைகள் முற்றுகையிட்டு உள்ளன என தெரிவித்து உள்ளது.


Next Story