இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை என அறிவிப்பு


Image Courtesy: AFP
x
Image Courtesy: AFP
தினத்தந்தி 30 March 2022 7:25 AM GMT (Updated: 30 March 2022 7:25 AM GMT)

இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 37,500 மெட்ரிக் டன்  டீசலை தரையிறக்க முடியவில்லை என பெட்ரோலிய கூட்டமைப்பு தலைவர் சுமித் விஜேசிங்க கூறியுள்ளார். 

மேலும் இலங்கையில் எரிபொருள் நிலையங்களில் டீசல் இல்லாததால் இன்றும் நாளையும் மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

அத்தியாவசிய தேவைகளுக்கான டீசல் கையிருப்பில் உள்ளது. தட்டுப்பாடின்றி பெட்ரோல் விநியோகம் நடைபெறும் என பெட்ரோலிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Next Story