இம்ரான் கானுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்- வன்முறையில் ஈடுபட ஆளும் கட்சி திட்டம்?


இம்ரான் கானுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்- வன்முறையில் ஈடுபட ஆளும் கட்சி திட்டம்?
x
தினத்தந்தி 3 April 2022 5:05 AM GMT (Updated: 3 April 2022 5:05 AM GMT)

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட இம்ரான் கானின் கட்சி திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்லமாபாத்,

தற்போது பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதாரநெருக்கடி எழுந்துள்ளது. இதையடுத்து இம்ரான்கானை பதவிநீக்கம்  செய்ய நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 எம்பிக்களில் இம்ரான் கானுக்கு 140 எம்.பி.க்களும் எதிர்க்கட்சிகளுக்கு 200 எம்.பி.க்களின் ஆதரவும் உள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று நம்பிக் கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு  இடையூறு ஏற்படுத்தும் வகையில் வன்முறையில் ஈடுபட இம்ரான் கானின் கட்சி திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தானை சேர்ந்த மூத்த  பத்திரிகையாளர் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். பாராளுமன்ற விடுதியில் இருந்து அவை நடைபெறும் வளாகத்திற்குள் எதிர்க்கட்சிகளை செல்ல விடாமல் தடுத்து நிறுத்த ஆளும் கட்சியினர் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

Next Story