கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது


கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
x
தினத்தந்தி 5 April 2022 1:46 AM GMT (Updated: 5 April 2022 1:46 AM GMT)

இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.

கொழும்பு,

இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வருகிறது. கொரோனாவுக்கு பின்னர் அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

 இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுடன், தினசரி பல மணி நேர மின்வெட்டும் நீடிக்கிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துவருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இலங்கை ரூபாயின் மதிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சரிவை சந்தித்தது. இதனால், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியாமல் தவித்து வருகிறது. 

இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று  காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.

நான்கு பேர் கொண்ட இடைக்கால அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடுகிற்து,பொருளாதார பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



Next Story