விலை உயர்ந்த பரிசு பொருட்களை விற்றுவிட்டார் இம்ரான்கான் மீது ஷபாஸ் ஷெரீப் குற்றச்சாட்டு


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 15 April 2022 9:36 PM GMT (Updated: 15 April 2022 9:36 PM GMT)

பாகிஸ்தானில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது புதிதாக வழக்குகள் பாய்ந்து வருகின்றன.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது புதிதாக வழக்குகள் பாய்ந்து வருகின்றன. இம்ரான்கான் மீது புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் நேற்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதாவது, இம்ரான்கான் ஆட்சியில் இருந்தபோது பரிசாக கிடைத்த வைர நகைகள், பிரேஸ்லெட்டுகள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை துபாயில் ரூ.14 கோடிக்கு விற்று விட்டதாக ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

அரசு கஜானாவில் இருந்து இந்த பொருட்களை எடுத்து விற்றுள்ளதாக தெரிவித்த ஷபாஸ் ஷெரீப், அதேநேரம் முன்பு தனக்கு கிடைத்த கைக்கடிகாரம் ஒன்றை கஜானாவில் ஒப்படைத்து விட்டதாக கூறினார்.

Next Story