அமெரிக்க அதிபருக்கு வந்த சோதனை! காற்றுடன் கைகுலுக்கி கொண்ட ஜோ பைடன்! வைரலாகும் வீடியோ


அமெரிக்க அதிபருக்கு வந்த சோதனை! காற்றுடன் கைகுலுக்கி கொண்ட ஜோ பைடன்! வைரலாகும் வீடியோ
x
தினத்தந்தி 16 April 2022 2:53 PM GMT (Updated: 16 April 2022 2:53 PM GMT)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது உரைக்குப் பிறகு கையை நீட்டியவாறு திரும்பினார், ஆனால் அங்கு யாரும் இல்லை.

வாஷிங்டன்,

காற்றுடன் கைகுலுக்கி கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.

அமெரிக்க அதிபர் பைடன், கடந்த வியாழக்கிழமை அன்று,  நார்த் கரோலினாவிற்குச் சென்று, வட கரோலினா ஏ&டி மாநிலப் பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 40 நிமிட உரையை நிகழ்த்தினார்.

பைடன் தனது உரையை முடித்ததும்,  மேடையின் வலது பக்கம் திரும்பி, கைகுலுக்கும் நிலையில் கையை நீட்டினார். இருப்பினும், மேடையில் வேறு எவரும் இல்லை, கைதட்டிக் கொண்டிருந்த கூட்டத்தில் இருந்து யாரும் அவரை அணுகி மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்ளவில்லை.  ஜோ பைடன் காற்றுடன் கைகுலுக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது.பைடனும் வெறுங்கையுடன் சுற்றித் திரிந்த பிறகு குழப்பமடைந்தார்.

டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை, ஒரே நாளில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 

Next Story