ராணுவ வீரர்களை அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்த அதிபர் ஜெலன்ஸ்கி...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 17 April 2022 10:53 AM IST (Updated: 17 April 2022 10:53 AM IST)
t-max-icont-min-icon

உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் முயற்சி எடுத்து வருகிறது.

உக்ரைன்,

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 54-வது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் - ரஷியா இடையே நீடித்து வரும் போரால் இருதரப்பிலும் பொருட்சேதம், உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் - ரஷியா போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சிகளை எடுத்து வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் ராணுவ வீரர்களை அதிபர் ஜெலன்ஸ்கி திடீரென அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். ராணுவ வீரரகளை சந்தித்த அதிபர் ஜெலன்ஸ்கி அவர்களுக்கு பதக்கங்களை பரிசாக அளித்து அவர்களை பாராட்டினார். 

இதனைத் தொடர்ந்து வீரர்களிடையே பேசிய அவர், நமது நாட்டையும், இறையாண்மையும் பாதுகாக்க போர்புரிந்து வரும் உங்கள் ஒவ்வொருவருக்கும் தான் நன்றி கூறிக் கொள்வதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story